நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான காரையாற்றில் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
ஆடி அமாவாசையையொட்டி சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சங்கிலியால் அடித்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.