“இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்” என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேசிய வாஸ்குலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் தேசிய வாஸ்குலர் தினத்தை ஒட்டி “ஆம்புடேசன் பாதிப்பில்லா உலகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.
நிகழ்சியை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் விஜய் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் டிஜிபி ரவி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
“இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்” என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்தார்.
இதில், ஏராளமானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.