வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமான 300 பேரை தேடும் பணிக்காக உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
லைவ் விக்டிம் ரேடார் என்று அழைக்கப்படும் அந்த ரேடார்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.
இதன் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்ணுக்குள் யாரேனும் புதைந்து கிடக்கிறார்களா? என்று ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.