வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் முண்டக்கை, சூரல் மலையில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, தேடுதல் மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது என தெரிவித்தார்.