தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் வெகு நாட்களாக மூடிக் கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நேரு காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள பழைய கிணற்றை சுத்தம் செய்யும் பணியின்போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதில் கிணற்றுக்குள் இறங்கி உயிரிழந்த மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டனர்.