கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அபாயம் குறித்து ஆய்வு நடத்தியது.
அதில், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட 15 நகரங்கள் பாதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரின் கடல் மட்டம் 0.66 மில்லி மீட்டர் அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.