விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரயிலில், காலியாக இருந்த 3 ஏசி பெட்டிகளில், மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.