தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தீக்குச்சி ஆலையால் மூச்சுதிணறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகள் குடியிருப்புப் பகுதிகளில் படிவதால், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே ஆலையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.