நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சுதந்திர தினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகையும் நடைபெற்றது. 2 மற்றும் 3-ம் கட்ட ஒத்திகை, வரும் 9 மற்றும் 13-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.