கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அணிகள் பங்கேற்றன.
பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் கோவை வெஸ்டன் அணியை 15- 8 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது.