மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திற்கு காவிரி நீர் வந்தடைந்ததால், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
மேட்டூரில் திறந்தவிடப்பட்ட உபரி நீர் வந்து சேராததால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழா களை இழந்து காணப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர் மயிலாடுதுறை நகருக்குள் நுழைவதைக் கண்டு பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பியும், “காவேரி அன்னையே வருக” என மலர்தூவி வரவேற்றும், சூடம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்தனர். காவிரியின் கடைசி கதவணை உள்ள மேலையூருக்கு காவிரி நீர் விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.