சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்து வந்தது.
இந்த செய்தி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாரத்தின் தொடக்க தினமான இன்று தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 91 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.