நெல்லை மாநகராட்சி புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரணவனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் நீடித்து வந்தது.
இதனால், மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கிட்டுவும், அவரை எதிர்த்து அண்மையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜும் போட்டியிட்டனர்.
இதில், பவுல்ராஜ் 23 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், 30 வாக்குகள் பெற்ற கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக மாநகராட்சி ஆணையாளர் சுகபத்ரா அறிவித்தார்.
மேயர் தேர்தலில் திமுகவினர் உட்கட்சி மோதல் காரணமாக, அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முகாமிட்டு, திமுக வேட்பாளர் கிட்டுவை வெற்றிபெற வைத்தாக கூறப்படுகிறது. வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் கிட்டு வெற்றி பெற்றுள்ளது திமுக தலைமையும், அமைச்சர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.