இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்க தேசத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
டாக்காவிலிருந்து ஹெலிகாப்டரில் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான படை தளம் வந்த அவரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ அதிகாரிகள் சந்தித்து வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ராணுவ பாதுகாப்புடன் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.