அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2007 -ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் சட்டவிரோத செம்மண் எடுத்ததால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது 46-வது சாட்சியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜரானார்.
இவர் அளித்த வாக்குமூலத்தையும், அதிகாரிகள் கொடுத்த அறிக்கையையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி என விசாரணை ஒத்தி வைத்தார்.