செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே சிமெண்ட் சாலையை அகற்றிய திமுக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பைராகி மடம் முதல் அங்கம்மாம்பட்டு வரை செல்லும் சாலையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் என்பவர் சாலையை அகற்றி முள்வேலி அமைத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்பாக்கம் – திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.