வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த சியாமளா, செய்யாறு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராஜகோபால் பூபதி தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.