திருநெல்வேலி அருகே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நால்வரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.