ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 21 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 24 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.