கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 9 கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்.
நீதிபதி பிஸ்வரூப் சவுத்ரி, நீதிபதி பார்த்த சாரதி சென், நீதிபதி பிரசென்ஜித் பிஸ்வாஸ், நீதிபதி உதய் குமார், நீதிபதி அஜய் குமார் குப்தா, நீதிபதி சுப்ரதிப் பட்டாச்சார்யா, நீதிபதி பார்த்த சாரதி சேட்டர்ஜி, நீதிபதி அபூர்ப சின்ஹா ரே, நீதிபதி முஹம்மத் ஷப்பார் ரஷிதி ஆகியோரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 31.08.2024 அன்று முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.