டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வகுக்கப்பட்டபோது கலால் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர் மணீஷ் சிசோடியா. இதனால் இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதைப் பரிசீலித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.