தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் தினசரி காய்கறி சந்தையில் வரத்து குறைவால் வாழைத்தார்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
பாவூர்சத்திரம் தினசரி காய்கறி சந்தையில் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடுவது வழக்கம்.
இந்நிலையில், வரத்து குறைவால் செவ்வாழை, மட்டி, ரோபஸ்டா உள்ளிட்ட வாழைத்தார்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
வாழைத்தார்களின் விலை ஏற்றத்தின் காரணமாக பழக்கடைகளில் விற்கப்படும் வாழைப்பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலை எவ்வித மாற்றமும் இன்றி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.