திருப்பத்தூர் அருகே ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
புதுப்பேட்டை சாலையான இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்கி வருவதாகவும், இதனை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டியுள்னர்.
நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அதனை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.