ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!
Jul 19, 2025, 05:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வகங்களில் முறையான பயிற்றுநர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துவதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கணினி அறிவியல் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைப்பதையும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைத்த பள்ளிக் கல்வித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் கணினி ஆய்வகங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசின் மூலம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்துவதோடு, கணினி  அறிவியல் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பெற்றுள்ள தமிழக அரசு, அதற்கான பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கணினி அறிவியல் ஆய்வகங்களில் உள்ள 14 ஆயிரத்து 400 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதி வாய்ந்த பயிற்றுனர்களை தமிழக அரசு நியமிக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதோடு, பிற பாட ஆசிரியர்களை வைத்தும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்றுநர்களை நியமிப்பது முறையாகப் பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜூலை 15 ஆம் தேதி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வழங்கிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தியிருப்பது பணிக்காகக் காத்திருக்கும் பல ஆயிரம் பட்டாதாரி ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஏமாற்று வேலையை உடனடியாக நிறுத்திவிட்டு மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததோ அதே நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுத்த வேண்டுமெனவும் கணினி அறிவியல் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Problem in the appointment of laboratory instructors: Opposition to the decision to hire private individualsஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல்அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல்
ShareTweetSendShare
Previous Post

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Related News

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

Load More

அண்மைச் செய்திகள்

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies