வங்கதேச விவகாரம் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வங்கதேச விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.