இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் - ஈரான்!
Sep 14, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்மையில் நடைபெற்ற ஈரான் – இஸ்ரேல் மோதலின்போது அந்நாடுகளில் உள்ள இந்திய முதலீடுகளுக்கும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மத்திய கிழக்கில் பெரும் சூறாவளியைக் கிளப்பி ஓய்ந்துள்ளது, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர். வெறும் 12 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த மோதலில், அதிநவீன ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், கிளஸ்டர் வெடிகுண்டுகள் எனக் கைவசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் இருநாடுகளும் களமிறக்கின.

மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ள இடங்கள் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் மட்டும் தப்பி தவறிக்கூட இஸ்ரேலும் ஈரானும் தாக்குதல் நடத்தவில்லை. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது சிறு கீறலும் விழவில்லை.

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையும்,  பிரதமர்  நரேந்திர மோடியும்தான். ஈரானில் உள்ள சாபஹார் பகுதியில் உள்ள துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடனும், ஐரோப்பியத் தேசங்களுடனும், ரஷ்யாவுடனும் இந்தியா எளிதில் வணிகம் மேற்கொள்ள இந்த துறைமுகம் பாலமாக இருந்து வருகிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் இந்த துறைமுகம்  துருப்புச்சீட்டாக உள்ளது.

ஈரானின் முக்கிய இடங்களைக் குறிவைத்து சாரை சாரையாக ஏவுகணைகளை அனுப்பிய இஸ்ரேல், சாபஹார்  துறைமுகம் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. இத்தனை ஏன், அந்த துறைமுகம் அருகில் உள்ள இடங்களில் கூட இஸ்ரேல் தாக்குதல் நடத்தத்  தயங்கியது. இத்தனைக்கும் ஈரானில் உள்ள மிகப்பெரிய துறைமுகமே சாபஹார் துறைமுகம்தான். அதனைத் தாக்கினால் ஈரானுக்கு மிகப்பெரிய சேதத்தை இஸ்ரேலால் ஏற்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், இந்தியாவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகக் கவனமாக இருந்தது. இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் கொண்டுள்ள நெருங்கிய பந்தத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆரம்பம் முதலே பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவைப் பாராட்டி வருகிறார்.

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியவுடனே உலக நாட்டு தலைவர்கள் சிலரை தொடர்புகொண்டு நெதன்யாகு பேச முடிவெடுத்தார்.  அவ்வாறு அவர் முதலில் பேசிய தலைவரில் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி. தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? மத்திய கிழக்கில் நிலவும் சூழல் என்ன? என்பது குறித்தெல்லாம் மோடியிடம் நெதன்யாகு எடுத்துரைத்தார்.

மறுபுறம், இந்தியாவுடன் நட்புறவு பேணுவதில், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைத்த நாடல்ல ஈரான். இஸ்ரேலில் இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் ஈரானும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை. தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான உதவிகளையும் ஈரான் செய்து கொடுத்தது.

போர் சூழல் காரணமாக ஈரானின் வான் போக்குவரத்து பரப்பு மூடப்பட்டிருந்தது. அதனைத் திறந்தால் மட்டுமே இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர முடியும் என்ற நிலை. இது தொடர்பாக ஈரானிடம் கோரிக்கை விடுத்தது இந்தியா. ஈரான் சற்றும் யோசிக்கவில்லை. இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தனது வான் பரப்பைத் திறந்துவிட்டு உதவிக்கரம் நீட்டியது.

மேலும், இஸ்ரேலை போலவே ஈரானும் இந்தியாவைத் தொடர்புகொண்டு, போர் சூழல் குறித்து விளக்கியது. போர் முடிந்தவுடன், தங்களுக்குத் துணை நின்றதற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஈரான் நன்றி தெரிவித்தது. இஸ்ரேல், ஈரான் என்றல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே இந்தியாவுடன் நட்புறவு பாராட்டவே விரும்புகின்றன. இதில் பாகிஸ்தானும் சீனாவும் மட்டும் விதிவிலக்கு.

அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த நாடுகளும் இந்தியாவுக்குத் துணை நிற்கின்றன. தங்களே ஒரு பிரச்சனையில் உள்ள போதிலும்கூட இந்தியாவிற்கு உதவ முன்வருகின்றன.

Tags: Israel and Iran express friendship with IndiaIndiaIranairstrikes on Israel.Israeli attack.
Share
Tweet
SendShare
Previous Post

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Next Post

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

Related News

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies