உத்தரகண்ட் மாநிலம் சோன்பிரயாக்கில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
இங்கு அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு படையினர், கரைபுரண்டு ஓடும் வெள்ளத்துக்கு மத்தியில் தூண்டில் பாலம் அமைத்து சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்.
இதனிடையே, ருத்ரபிரயாக் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் வாயிலாக ஆய்வு செய்தார்.