கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இழைகளால் பின்னப்பட்ட கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தை அடையாளப்படுத்துவதுடன் சுயசார்பு மற்றும் சுதேசிய உணர்வை வெளிப்படுத்துகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், மதுரை சுங்குடிப் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், தஞ்சாவூர் பட்டுத் துணி, பட்டமடைப் பாய் போன்றவை தமிழ்நாட்டின் நேர்த்தியான கைத்தறிகள் எனக் கூறியுள்ள அவர், கலாசார செழுமையையும், தனித்துவ குணங்களையும் கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நமது கைவினைஞர்களை கௌரவித்து ஆதரவளிப்போம் எனவும்ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.