சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்தது.
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று 2-வது நாளாக குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 330 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 50 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது.
அதன் படி ஒரு கிராம் வெள்ளி 87 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 87 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.