வயநாடு நிலச்சரிவில் மனித உயிர்களுடன் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவத்தால் மாடு வளர்ப்பவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை , அட்டமலை பகுதியில் 400க்கும் மேற்பட்ட பசு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பறிபோனதைப் போல் 200க்கும் மேற்பட்ட மாடுகள் மண்ணில் புதைந்தும், ஆற்றில் அடித்தும் செல்லப்பட்டன. சில மாடுகள் தேயிலை தோட்டம் உள்ளிடவற்றில் உலா வருகின்றன.
புலி நடமாட்டமும் இருப்பதால் மாடுகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும் மாடு வளர்ப்பவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
















