முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை! - அண்ணாமலை
Aug 20, 2025, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 7, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீராம் என கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகாராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தென்னிந்திய மீனவர் பேரவையில் இருந்து 100 நபர்கள், தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை,

இந்திய – இலங்கை மீனவ பகுதியில் 2024 இதுவரை 223 பேர் கைது செய்துள்ளனர். ஒரே ஆண்டில் குறிப்பாக 69 மீனவர்கள் சிறையிலும் 8 மீனவர்கள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். அபராதம் இல்லாமல் வேகமாக 69 பேரும் மீட்டு தமிழகத்துக்கு வர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆள் கடலில் இலங்கை கப்பலும் நமது கப்பலும் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை துறை அமைச்சரும் அரசு அதிகாரிகளும், மற்றும் இந்திய அமைச்சரும், அரசு அதிகாரிகளும் விரைவில் சந்திக்க உள்ளனர்.

இந்திய மீனவர்களில் 170 படகுகள் இலங்கை அரசிடம் உள்ளது. 16 படகுகள் இதில் மீட்டுள்ளோம் கூறினார். இலங்கையில் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

வடகிழக்கு பகுதியில் உக்கிரமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு நாடு மீனவ சங்கங்களுடன் இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய வெளிவருத்துறை அமைச்சவுடன் பேசினேன். இதற்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

1995- ஆண்டு வக்பு போர்டு சட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 9.4 லட்சம் சொத்து  வக்போர்டு கையில் உள்ளது.

8.7 லட்சம் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் அதிகப்படியான மூன்றாவது இடத்தில் வக்பு போர்டு சொத்து வைத்துள்ளனர்.

இஸ்லாமியர்களில் இரண்டு பிரிவினர்  உள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு நல்ல ஒரு விஷயம் நடக்கும். சில அரசியல்வாதிகள் இந்த சட்டத்தை குழப்புவதற்காக முயற்சிக்கின்றனர். யாருக்கும் எதிரான சட்டம் இது கிடையாது இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம்.

50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டுள்ள வினேஷ் போஹத்தின் எடை, 100 கிராம் அதிகமாக தாண்டி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், பதக்க வாய்ப்பை இழந்தார் வினேஷ் போஹத் இது ஒரு துதிர்ஷ்டமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அருந்ததியருக்கு எஸ்.சி சமுதாயத்திற்கான 3%உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு தமிழகத்திற்கு பொருந்தும், இதை பாஜக சார்பில் வரவேற்கிறேன்.

உயர் நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில், இரண்டு அமைச்சர்களுக்கு தீர்ப்பளித்ததை வரவேற்கிறேன். தாமதமாக இந்த தீர்ப்பு வந்திருந்தாலும் வேகமாக இறுதி தீர்ப்பு வர வேண்டும்.  அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு இந்த வழக்கில் உள்ளனர்.

உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு போனாலும் தவறு செய்தவர்கள், பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மறுபடியும் இதே தீர்ப்பு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு சமுதாயம் பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கூறினார்.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழகத்தில் காவல்துறையை பாராட்டுகிறேன். ஒரு தேசிய கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரை கைது செய்துள்ளனர். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கை கொடுத்துள்ளது.

பங்களாதேஷில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் இந்திய அரசு எடுக்கக்கூடிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் துணை இருக்கும் என்று சொல்லி இருக்கின்றனர். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

எங்களுடைய நடவடிக்கைகள் திமுகவிற்கு பயம் அளித்துள்ளது. எல்லா மதத்தையும் சமமாக நடத்த வேண்டும். பழனியில் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர், நல்லபடியாக நடத்த வேண்டும்.

இதே போல சென்றால் வருங்காலங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெய்ஸ்ரீராம் சொல்லுவார். அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதற்கான அடித்தளத்தை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார் என தெரிவித்தார்.

Tags: The day when Chief Minister M.K.Stalin declares Jai Sriram is not far away! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்! : இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!

Next Post

வினேஷ் போகத் தகுதிநீக்கம்! – பிரதமர் மோடி வருத்தம்

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies