மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடையான காரைக்கால் வந்தடைந்தது.
இதையடுத்து காரைக்கால், நல்லம்பல் நூலாறு சட்ரசில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நெல்மணி, நவதானியங்கள் மற்றும் மலர் தூவி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா, விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காரைக்காலுக்கு தேவையான ஏழு டிஎம்சி நீரை தமிழகத்திடம் இருந்தது கேட்டுப் பெறுவோம் என்றும் ஆட்சியர் அப்போது உறுதியளித்தார்.