புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுநீரகம் செயலிழந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்கு பணம் கொடுத்து உதவிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேனக்காடு கிராமத்தை சேர்ந்த சிவராஜ்- சுமதி தம்பதியின் 15 வயது மகள் இந்திரா சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதுகுறித்து அறிந்த அண்ணாமலையான் குடியிருப்பை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் முத்துகணேஷ், தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.