தனது ஐஏஎஸ் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.
புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரது ஐஏஎஸ் அங்கீகாரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பூஜா, அங்கீகாரம் ரத்து செய்தது தொடர்பாக தனக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் அங்கீகார ரத்து தொடர்பான அறிவிக்கை அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.