நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தமன.
இந்நிலையில் கோக்கால் பகுதியில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.