குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் பல இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நித்திரவிளை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகள், கோயில்களில் ஒரே நேரத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கொள்ளையனை தேடி வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேல்புறம் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
















