புதுச்சேரி 33-வது துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட கைலாஷ்நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 27 ஆம் தேதி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்தார். அந்த வகையில் மூன்றறை ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகரி கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக அவர் இன்று பதவியேற்றுகொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.