ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா, வருகையின்போது விசா வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா, வணிகம், மாநாடு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக இந்தியா வருபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே விசாவுக்கு பதிவு செய்த பயணிகள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.