சென்னை பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றவாளிகளை கண்மூடித்தனமாக தாக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீடியோ வெளியாகியுள்ளது.
பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் சிவக்குமார், விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளை கடுமையாக தாக்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 இளைஞர்களை, சிவக்குமார் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடியே, கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.