வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், மக்களை கண்டு ஆறுதல் கூறவும், வரும் 10ம் தேதி பிரதமர் மோடி வயநாடு செல்கிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 405-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பேரழிவில் சிக்கி உயிர்பிழைத்த மக்களை கண்டு ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி வரும் 10ம் தேதி வயநாடு செல்லவுள்ளார்.
பிரதமரின் வரவை முன்னிட்டு வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.