இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி தற்போது ஒரு நாள் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் இங்கிலாந்துக்கு செல்ல இருக்கும் இலங்கை அணி அந்நாட்டு வீரர்களுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
வரும் 21-ம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கும் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் தனஞ்செயா டி சில்வா கேப்டனாகவும், திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, பதும் நிசாங்கா உள்ளிட்டோர் களவீரர்களாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.