திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிலத் தகராறு காரணமாக விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாலப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, அழகேசன் ஆகிய இருவருக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் பழனிச்சாமிக்கு சொந்தமான மரத்தை அழகேசன் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, அழகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் ஆகியோர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பழனிசாமி உயிரிழந்த நிலையில் தப்பியோடிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.