தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாகன சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாமக குளக்கரையில் இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.