மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக் குறைவால் காலமானார்.
கொல்கத்தாவில் உள்ள வீட்டில் காலை 8.20 மணியளவில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உயிர் பிரிந்ததாக புத்ததேவ் பட்டாச்சார்யா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீரா என்ற மனைவியும், சுசேதனா என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.