மதுரை மாவட்டம் மேலூரில் பழுதாகி நின்ற புதிய அரசு மாநகரப் பேருந்தை பயணிகள் தள்ளிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்துக்கு அரசு மாநகரப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சென்றபோது பேருந்து பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்தை தள்ளிச் சென்றனர். மேலும், நெரிசலான பகுதியில் பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.