ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான 2 நாள் நாணய கொள்கைக் குழு கூட்டம் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.
இன்றுடன் இந்த கூட்டம் முடிவடைய உள்ள நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதனால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.