ஜூலை மாதத்தில் 11 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஜூலை 12ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 3 லட்சத்து 50 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை மெட்ரோ ரயிலில் 95 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஜூலை 12ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 3 லட்சத்து 50 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விம்கோ நகர் முதல் வண்ணாரப்பேட்டை வரை நீலநிற வழித்தடத்தில் 10 நிமிடங்கள் தாமதமான ரயில் சேவை மீண்டும் சீரானதாகவும், பச்சை வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.