சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த 1993 ஆம் ஆண்டில், சென்னை RSS அலுவலகம் மீது இதே நாளில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு, 11 ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர் என தெரிவித்துள்ளார்.
தேசம், தெய்வீகம், சமுதாயம் என்று வாழ்ந்து, இத்தகைய பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.