ஈரோட்டில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் அவதி அடைந்துள்ளனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் அவதி அடைந்து வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.