நெல்லையில் அமைந்துள்ள காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் சுவாமி கோயிலில் முளைகட்டும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கப்பட்ட ஆடித்திருவிழா இக்கோயிலில் ஓவ்வொரு நாட்களும் சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் சிகர நிகழ்ச்சியான முளைகட்டும் விழா பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
இதில் அம்மன் பட்டாடைகள் மற்றும் வளையல் அணிவிக்கப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.